வள்ளுவத்தைக் காட்டிலும் ஒரு சிறந்த நூல் ஒன்றில்லை! வள்ளுவர் மனிதரை வகைப்படுத்துகின்றார். அவர் இயற்றிய குறட்பாக்களுள் நான்கில் மட்டும் இறுதிச் சீர்கள் 'வைக்கப் படும்' என்று முடியும்! இந்த நான்கு குறட்பாக்களிலும் வள்ளுவர் மனிதனை வகைப்படுகின்றார். அவையாவன:
1) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - குறட்பா 50
2) ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும் - குறட்பா 214
3) முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும் - குறட்பா 388
4) உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் - குறட்பா 850
மனிதரின் பண்புகளை அளவிட்டறிதலில் வள்ளுவத்தைப் போன்று தெளிந்த போக்கு வேறு எங்கேணும் கண்டதுண்டா! வள்ளுவத்தைப் படிக்க; வாழ்க்கையை உணர்க!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment